மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு

மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது மேல்மாகாண அரச சேவையிலுள்ள அலுவலர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கில் விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒரு பிரதான நிறுவனமாகும்.

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 12/90இன் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ள, அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 14/90 மற்றும் 10/2001 இன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ள, மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது பிரதான செயலாளர் அலுவலகத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 150 இற்கும் மேற்பட்ட பயிற்சிநெறிகளை நடாத்தி, 5000 இற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் இவ்வலகானது, ஆண்டுதோறும் புதிய பயிற்சி நெறிகளை அறிமுகப்படுத்துவதுடன் மேல்மாகாண அரச சேவையிலுள்ள ஆளனியினரது சேவையை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் ஆற்றுவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.

எமது கடமைப் பொறுப்புக்கள்

•    அனைத்து ஆளனியினரதும் பயிற்சி தேவைப்பாடுகளை இனங்கண்டு பயிற்சிநெறிகளைத் தயாரித்தல் மற்றும் நடாத்துதல்.
•    தகவல் தொழிநுட்ப அறிவினை வழங்குவதற்கு தகவல் தொழிநுட்ப நிறுவனத்திற்குச் செல்லுகின்ற அலுவலர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.
•    மொழித்தேர்ச்சிக்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
•    மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் உள்ளடக்கப்படாத ஏனைய அத்தியாவசியமான பயிற்சி நெறிகளுக்கென வெளியார் நிறுவனங்களுக்குச் செல்லுகின்ற அலுவலர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.
•    டிப்ளோமா மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகளுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.
•    அமைச்சு, திணைக்களங்களுக்குத் தேவையான விசேட பயிற்சி நெறிகளுக்கான ஒதுக்குகளை வழங்குதல்.
•    வெளிநாட்டு புலமைப்பரிசில்களுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்.

மனிதவள அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம்