வெளி நாட்டுப் பயிற்சிகள்
மேல் மாகாண சபையில் சேவையாற்றுவோரின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கினை விருத்தி செய்வதற்காகவும் ஏனைய நாடுகள் பற்றிய அனுபவம் மற்றும் அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் வருடாந்தம் வெளி நாட்டுப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, வெளி வள திணைக்களம், அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் போன் வெளிப் பிரிவுகள் மூலம் ஒழுங்கு செய்யப்படும் வெளி நாட்டுப் பயிற்சிகளை கூட்டிணைப்பதிலும் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவு அக்கறை கொண்டுள்ளது. மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 200 அலுவலர்கள் வெளி நாட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்வதுடன் இக்கொள்திறன் விருத்தி வாய்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக 30,000,000 ரூபாவிற்குமதிகமான நிதி வருடாந்தம் செலவிடப்படுகிறது.